நீட் தேர்வுக்கு விலக்கு கோரி டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி வரும் 16 ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 16 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகாராட்சி அனுமதி மறுத்துள்ளது.
16- ஆம் தேதி வேறு ஒருவருக்கு அனுமதி வழங்கியுள்ளதால் அன்றைய தேதியில் அனுமதி வழங்க முடியாது என்று திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்தது பற்றி கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, “நீதிமன்றத்தில் அனுமதி பெற்று திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடத்துவோம்” என்றார்.

