அனிதா வீட்டில் நடிகர் விஜய்! தந்தை, சகோதரருக்கு ஆறுதல்!(காணொளி)

மாணவி அனிதாவின் இல்லத்திற்கு இன்று (11.09.2017) காலை 9.50 மணிக்கு சென்றார் நடிகர் விஜய். கார் டிரைவர் மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் சென்ற விஜய், அனிதாவின் தந்தை, சகோதரர் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு கவரை கொடுத்து உதவித் தொகையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினாராம்.

நடிகர் விஜய் வந்தது தெரியாது, ஏதோ செய்தியாளர்கள்தான் வந்திருக்கிறார்கள் என நினைத்தோம். உள்ளே சென்றால் விஜய் உட்கார்ந்திருந்தார் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அவரின் வருகை செய்தியாளர்களுக்கு முன்கூட்டியே தெரியாததால் விஜய் வருவதை படம் பிடிக்கவோ, அவரிடம் கருத்துக்களை பெறவோ முடியவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்