வித்தியா வழக்கு: 1 மற்றும் 7 ஆம் எதிரிகளுக்கு எதிராக ஆதாரமில்லை!! கைவிரித்தது அரச தரப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும், எதிரித் தரப்பினரும் தொகுப்புரைகளை வழங்குகின்றனர்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சிய தொகுப்புரை இன்று வழங்கப்படுகின்றது. 1ஆம் எதிரிக்கும், 7 ஆம் எதிரிக்கும் எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தொகுப்புரையில் பிரதி மன்றாடியார் அதிபர் குறிப்பிட்டார்.

ஏனைய 7 எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுவதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்