வடக்கு ஊட­கங்­க­ளால் மக்­க­ளுக்கு என் மீது தவ­றான புரி­தல்­கள் – விக்கி

“வடக்­கில் உள்ள சில ஊட­கங்­கள் நான் தெரி­விக்­கும் கருத்­துக்­களைத் திட்­ட­மிட்டுத் திரி­பு­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­றன. இத­னால் மக்­க­ளு­டன் தவ­றான புரி­தல்­கள் ஏற்­பட வழி­வ­குக்­குப்­ப­டு­கின்­றது”
இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுதந்­திர ஊடக இயக்­கப் பிர­தி­நி­தி­க­ளு­ ட­னான சந்­திப்­பில் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும், கொழும்­பில் செயற்­ப­டும் சுதந்­திர ஊடக இயக்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யே­யான சந்­திப்பு கடந்த வெள்­ளிக் கிழமை நடை­பெற்­றது. இந்தச் சந்­திப்­பி­லேயே முத­ல­மைச்­சர் மேற்­படி விட­யத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

“கடந்த அர­சின் காலத்­தில் வடக்கு – கிழக்­கில் படு­கொ­லை­செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தொடர்­பான உண்­மை­யைக் கண்­ட­றி­வ­தற்கு இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் தண்­ட­னை­யில் இருந்து தப்­பிக்­கும் வகை­யி­லான நிலை காணப்­ப­டு­கின்­றது.

விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்­கும், நீதி­யின் முன்­நி­றுத்­து­வ­தற்­கும் பன்­னாட்­டுச் அழுத்­தம் முக்­கி­ய­மா­னது. ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொலை குறித்து விசா­ரணை நடத்த அரச தலை­வர் ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தால் நன்று” என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சுட்­டிக்­காட்­டி­னார்.

“வடக்­கில் உள்ள சில ஊட­கங்­க­ளில் நான் தெரி­விக்­கும் கருத்­துக்­களை திட்­ட­மிட்ட வகை­யில் திரி­வு­ப­டுத்தி வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.

இத­னால் மக்­க­ளு­டன் தவ­றான புரி­தல்­கள் ஏற்­பட வழி­வ­குக்­கின்­றது. வடக்­கில் நான் தெரி­விக்­கும் கருத்­துக்­க­ளுக்கு முற்­றும் முர­ணான வகை­யி­லேயே தென்­னி­லங்­கைப் பத்­தி­ரி­கை­கள் செய்தி வெளி­யிட்டு என்­னைப் பயங்­க­ர­வா­தி­யாக சித்­த­ரிக்க முயல்­கின்­றன” என்­றும் முத­ல­மைச்­சர் இதன்­போது தெரி­வித்­தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்