சிறு­மி வன்­பு­ணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்

12 வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

புதுக்­கு­டி­யி­ருப்­புப் பகு­தி­யைச் சேர்ந்த 53 வய­து­டை­ய­வ­ருக்கே இவ்­வாறு தண்­டணை விதிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
2012ஆம் ஆண்டு செப்­டெம்­பர் வன்­பு­ணர்வு இடம்­பெற்­றது. சிறு­மி­யின் தாயார் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.

சந்­தே­க­ந­ப­ரைக் கைது செய்த புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்­னர் முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். வழக்கு விசா­ர­ணை­கள் முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றத்­தில் இடம்­பெற்று வந்­தது. 6 மாதங்­கள் விளக்­க­ம­றி­யில் வைக்­கப்­பட்டு பின்­னர் சந்­தே­க­ந­பர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

கடந்த மே மாதம் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தால் குற்­றப்­ப­கிர்­வுப்­பத்­தி­ரம் வவு­னியா மேல் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வந்­தன. நேற்­று­முன்­தி­னம் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு குற்­ற­வாளி இரண்டு இலட்­சம் ரூபாவை இழப்­பீ­டா­கச் செலுத்­து­மா­றும் அதைச் செலுத்­தத் தவ­றின் மேல­தி­க­மாக இரண்டு வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறை அனு­ப­விக்க வேண்­டும் என­வும் தண்­ட­னைத் தீர்ப்­பில் குறிப்­பி­டப்­பட்­டது.

தண்­டப்­ப­ண­மாக 10 ஆயி­ரம் ரூபா செலுத்­து­மா­றும் அதைச் செலுத்­தத்­த­வ­றின் ஒரு மாதம் சாதா­ரண சிறைத் தண்­டனை அனு­ப­விக்க நேரி­டும் என்­றும் தீர்ப்­பில் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (18.02) இரவு 11.15மணியளவில் கைது செய்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அந்த சூடுபிடித்தலுக்கான பேசுபொருளாக அபிவிருத்தி அபிவிருத்தியுடன் கூடிய தேசிய அரசியல்
வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (03.02) மாலை 4.30 மணியளவில் கவிஞர் அருந்தவராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*