பருத்தித்துறை: கைக்குண்டுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலையில் இந்த இளைஞர் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*