மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் உயிரிழப்பு!

யாழ்.வேலணை பாலத்தடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உரிழந்துள்ளார்.

ஊர்காவற்றுறை தம்பாட்டியை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான முத்தையா-கனகசபை (வயது-69) என்பவரே திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது…

குறித்த நபர், வேலணை பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல்பகுதியில் வீச்சு தொழில் மேற்கொண்டு வந்துள்ளார். வழமை போன்று நேற்று மதியம் வீச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக கரைக்கு வந்து ஓய்வெடுக்க முயற்சித்தவேளை அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வீதியால் சென்றவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்திய சாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் அரசடி
பாசை­யூர் கடற் பகு­தி­யில் இடி தாங்கி, வெளிச்­ச­வீடு அமைத்­துத் தர வேண்டும் என யாழ் மாவட்­டக் கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மேள­னம் கடற்­றொ­ழில்
அண்மையில் உயிரிழந்த யாழ். நாகவிகாரபதியின் உடலை, யாழ்ப்பாணத்தில் தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி மற்றும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*