சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றி கதைப்பது சரியல்ல – விக்கி !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தொடர்பாகக் கதைப்பது சரியல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசியலில் ஒரு மாற்றுத் தலைமை அவசியமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இது ஒரு சிக்கலான கேள்வி. தமிழர்களின் தலைமைப் பீடங்கள் எப்போதுமே மக்கள் கருத்தை அறிந்தவர்களாக இருக்கவேண்டும்.

தான்தோன்றித் தனமாக தாம் நினைப்பதே சரியென்று நினைத்து அதனை மக்கள் மீது திணிக்கமுடியும் என நினைக்கும் தலைமைத்துவம் எப்போதுமே வெற்றி பெறா.

இரா.சம்பந்தன் ஒரு பழுத்த அரசியல்வாதி. 84வயதிலும் மிகுந்த நினைவாற்றல் கொண்டவர். இந்த வயதிலும் எங்கெங்கு என்ன நடந்ததென்பதைத் தெரியப்படுத்துவார்.

அவர் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றிக் கதைப்பது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவார் என நம்புகின்றீர்களா? இது இறைவன் ஆணைப்படியே நடக்கும்எனத்தெரிவித்தார்.

சம்பந்தன் தீர்வை எடுத்துத் தருவாரோ இல்லையோ, ஒவ்வொருத்தரும் தமது முயற்சியை எடுத்து வருகின்றனர். எல்லாம் அவன் செயல் எனத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்