திருமலையினில் வெடிபொருளுடன் இளைஞன் கைது!

திருகோணமலை, இறக்ககண்டி பிரதேசத்தில் நேற்றிரவு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்கள் வைத்திருந்ததாக தெரிவித்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறக்ககண்டி பிரதேசத்தினைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்த இவ்வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்