கேப்பாப்புலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 200 நாட்களைக் கடந்துவிட்டது.
201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள கேப்பாப்புலவு மக்கள் தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி சந்திரலீலா நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, பிரஜா அபிலாஷா கைகோர்க்கும் வளையமைப்பு அதனுடன் இணைந்து 22 பங்காளர் அமைப்புகளும் கேப்பாப்புலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள மக்களின் பாரம்பரிய காணிகளை விடுவித்து மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தென்பகுதியைச் சேர்ந்த இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

