த.தே.கூட்டமைப்புடன் இனைந்து போட்டியிட முடியாது – முஸ்லிம் காங்கிரஸ் தெர்ரிவிப்பு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து போட்­டி­யிட முடி­யாது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தன் மூலமே முஸ்­லிம் காங்­கி­ரஸ் கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ளும்.

எனவே அந்­தக் கட்­சி­யு­டன் சேர்­வ­து­தான் பொருத்­த­மா­கும். இவ்­வாறு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபை­யின் முன்­னாள் உறுப்­பி­ன­ரும், முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் அம்­பாறை மாவட்ட மையக் குழு உறுப்­பி­ன­ரு­மான கலீல் தெரி­வித்­தார்.

முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யின் அம்­பாறை மாவட்டச் செயற்­கு­ழுக் கூட்­டம் சம்­மாந்­துறை அப்­துல் மஜீத் மண்­ட­பத்­தில் கட்­சி­யின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:கிழக்கு மாகா­ணத்­தில் முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் ஆட்­சியைத் தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டு­மா­யின் மூன்று மாவட்­டங்­க­ளி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைய வேண்­டும். நமது எதி­ரி­கள் முழு­மை­யாகத் தோற்­கின்ற நிலை இதன் மூலம் உரு­வா­கும்.

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்சி இந்த நாட்டு சிறு­பான்­மை­யின முஸ்­லிம்­க­ளின் உரி­மையை வென்றெடுக்­கும் இயக்­க­மா­கும். இந்த இயக்­கத்தைப் பதவி ஆசை பிடித்­த­ வர்­க­ளால் ஒருபோதும் அழித்­து­விட முடி­யாது.

கொழும்பு அர­சி­லும், மாகா­ணத்­தி­லும் ஆட்­சி­யில் இருக்­கின்­றோம். மக்­க­ளுக்­கா­ன வேலைத்­திட்­டங்­களைக் கட்­சி­யின் பத­வி­யில் உள்ள அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண சபை உறுப்­பி­னர்­கள், தவி­சா­ளர்­கள் சிறந்த முறை­யில் முன்னெ­டுத் ­துச் செல்ல வேண்­டும்.

இன்று கட்சி ஆத­ர­வா­ளர்­கள் பல­ரும் விரக்தி நிலை­யில் உள்­ள­னர். தங்­க­ளுக்குக் கிடைக்­கின்ற வச­தி­க­ளை­யும், வரப்­பி­ர­சா­தங்­க­ளை­யும் கட்­சிப் போரா­ளி­க­ளின் நல­னில் பயன்­ப­டுத்­தாது இருக்­கின்­ற­னர்.

குறிப்­பிட்ட சிலர்­தான் அதி­கா­ரப் பத­வி­யி­லும், கட்­சி­யின் அமைப்­பா­ளர் பத­வி­யி­லும் இருப்­ப­தால் கட்­சியை வெற்­றிக்கு இட்­டுச் செல்ல முடி­யாது.
எல்­லோ­ருக்­கும் பத­வி­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டும். எல்­லாம் அவர்­கள்­தான் என்ற நிலையை மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும்.

நமது தலை­வ­ரின் கரங்­க­ளைப் பலப்­ப­டுத்திக் கட்­சியை அழிக்க நினைக்­கும் சதி­கா­ரர்­க­ளுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்ட கட்­சிப் போரா­ளி­கள் களத்­தில் இறங்க வேண்­டும் – – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்