நாகர்கோயில் பாடசாலை மாணவர்களின் படுகொலை தினம் அனுஸ்டிப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலையில் 40 பேர் படுகொலை செய்யப்பட்ட 22ஆவது ஆண்டு நினைவு தினம் நாகர்கோயில் மகா வித்தியாலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மத்திய பாடசாலையில் சிறீலங்கா விமானப் படையினரின் குண்டுவீச்சில் 26 மாணவர்கள் உட்பட 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 26 மாணவர்கள் உடல் சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் அடங்குகின்றனர்.

இந்த கோரத் தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும்
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த கொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்தது. இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்