ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் நிலை மாறுகால நீதிப் பொறிமுறைகள் பற்றிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இந்த விடயங்களில் மெதுவான -ஆனால் உறுதியான நகர்வையே முன்னெடுக்கும் என்று ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சார்ந்த முரண்பட்ட கருத்துக்களை இருவரும் வெளிப்படுத்தியுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்