அரசியல் கைதிகள் தொடர்பினில் சம்பந்தனிற்கு சவால்!

அனுராதாபுரம் சிறையில் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு முடிவை காண எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் அமைப்பாளரான வண மா.சக்திவேல் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அனுராபுரம் சிறையில் தற்போது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துவரும் மூன்று அரசியல் கைதிகளும் கடந்த ஆகஸ்ட் மாதமும் உண்ணாவிரதப்போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அன்று அவர்கள் தமது வழக்குகள் வவுனியாவிலிருந்து சிங்களப்பகுதி நீதிமன்றத்துக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதன்மூலம் தமது விடுதலை இழுபட்டுச்செல்லுமென்பதால் இதனை தடுக்குமாறும் கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதனை தடுக்குமாறு கோரி தெளிவான விளக்கத்துடன் எதிர்கட்சி தலைவருக்கு கடிதம் எமது அமைப்பால் எழுதப்பட்டுள்ளதால் அவர் நடவடிக்கை எடுப்பாரெனக் கருதி அரசியல்கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டத்தை நிறுத்தினோம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ம் திகதி எழுதிய கடிதத்துக்கு எதிர்கட்சி தலைவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

அதேசமயம் அந்த அரசியல் கைதிகளின் வவுனியா நீதிமன்ற வழக்;குகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் மூன்று அரசியல் கைதிகளும் தற்போது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான பொறுப்பு எதிர்கட்சி தலைவரிடமே உள்ளதால் இது தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்