ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க நடவடிக்கை

சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் க்றிஸ்தோபர் ஸ்டைலியானைட்ஸை சந்தித்திருந்தது.

இதன்போது அமைச்சர் திலக்மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சர்வதேசத் தரத்திற்கு முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்துடன் ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பொறிமுறைகள் ஒவ்வொன்றாக அமுலாக்கப்படும்.
இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்