அம்பாறையில் விபத்து இளைஞன் பலி

சியம்பலாண்டுவ – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலஸார் குறிப்பிட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்