துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்றுவதற்கு வடக்கு மாகாணசபையில் எதிர்ப்பு!

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு இன்று பேரவையின் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த அமர்வில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

அழிக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் என்றாவது ஒருநாள் புனரமைப்பு செய்யப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களாகவே இருக்கும்.

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றியமைக்க வேண்டும் என அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனால் அவ்வாறு தாவரவியல் பூங்காக்களாக மாற்ற வேண்டிய தேவை இல்லை.

அவை மாவீரர் துயிலும் இல்லங்களாகவே இருக்கட்டும்.

இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் அவை புனரமைக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்