நீதிமன்றம் தீர்ப்பு – மகிந்த அதிர்ச்சி!

சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் தலைவராக நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்த மனுக்களை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்துள்ளது.

பிரதான மாவட்ட நீதிமன்ற சுஜீவ நிஸங்கவினால் மேற்படி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சுதந்திரக்கட்சியின் பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த மற்றும் நகரசபை உறுப்பினர் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் மேற்படி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இப்பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குமாறு கோரியே மேற்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்