மியான்மாரில் நடப்பதை வந்து பாருங்கள் – ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அழைப்பு

ரோஹிங்யா இஸ்லாமியர் குறித்து நேரில் வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரேஸுக்கு மியான்மர் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமிய மக்களின் நிலை குறித்து குட்டேரஸ் கடுமையான கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அவையில் பேசிய மியான்மரின் பாதுகாப்பு ஆலோசகர் தாங் துன் இந்த அழைப்பை விடுத்தார். ரோஹிங்யா இஸ்லாமியர் குறித்து கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக பொதுவெளியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகள் மேலும் தீவிரமடைந்து பல இடங்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். வன்முறைகளால் மேலும் அதிகமான ரோஹிங்யா இஸ்லாமிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு அவையின் கூட்டத்தில் மியான்மர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கொடூரமாகக் கொல்லப்படுவது குறித்த தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாகக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே, மியான்மருக்கு ஆயுதங்கள் அளிப்பதை உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*