சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம்

இலங்கiயில் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுமுள்ளதுடன், பல்லாயிரக் கணக்கானோர் அனாதைகளாவும் ஆக்கப்பட்டுமுள்ளனர்.

குறிப்பாக இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். செஞ்சோலை சிறார் இல்லம் உட்பட பொது மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீலங்கா விமானத் தாக்குதல்களிலும், தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அது மட்டுன்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பிள்ளைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பாலச்சந்திரன் உட்பட பல சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரும் வகையிலான விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து பொது மக்களையும், பொது அமைப்பு சார்ந்தவர்களையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: யாழ் பேருந்து நிலையம் முன்பாக

நேரம்: காலை 9.00 – 12.00

காலம்: 01-10-2017 (ஞாயிற்றுக்கிழமை)

நன்றி

இ.ரவிசங்கர்
இணைப்பாளர்
இளைஞர் அணி (நல்லூர் வட்டம்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்