பனிக்கங்குளம் ஞானவைரவர் கோவிலுக்கு ரவிகரனால் ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கிவைப்பு.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள பனிக்கங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட ஞானவைரவர் கோவிலுக்கு, வடமாகாண சபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்களால் ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு (2017) மூலம், ரவிகரன் அவர்களால் குறித்த ஒலி பெருக்கி சாதனங்கள் இந்த ஆலயத்திற்கு, வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது, 11.08.2017 (வெள்ளி) அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடை பெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக, உதவி பிரதேச செயலகர் மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாகப்பணியாளர் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில், பனிக்கங்குளம் ஞான வைரவர் ஆலய பரிபாலன சபையினர் கலந்து கொண்டு, ரவிகரன் அவர்களிடம் ஒலி பெருக்கிக்கருவிகளை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்