ஏவுகணைகளை நகர்த்துகின்றது வடகொரியா- வெடிக்குமா போர்?

தலைநகரிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு பல ரொக்கட்களை வடகொரியா இடமாற்றியுள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைநகரின் வடகுதியில் உள்ள சனும்டொங் என்ற பகுதியிலிருந்து ஏவுகணைகள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதை பார்க்க முடிந்ததாக அமெரிக்க தென்கொரிய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சனும் டொங் பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளதும் அங்கு கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
வடகொரியா பதட்டத்தை தூண்டும் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள தருணத்திலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*