வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது!

வவுனியா பேருந்து நிலையத்தில் அரச அனுமதியற்ற சட்டவிரோத புகையிலை பெட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு உப பரிசோதகர் டே.திணேஸ் தலைமையின் கீழ் பொலிஸ் சார்ஜன்ட் அனுர, பொலிஸ் உத்தியோகத்தர்களான கீர்த்தி, குமார ஆகியோர் அடங்கிய குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சட்ட விரோதமான 800 புகையிலை சுருள்கள் அடக்கிய 40 புகையிலை பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்