வடக்கின் கருத்தை நாம் கேட்கத்தேவையில்லை – சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர்

வடக்­கில் நீண்ட போர் நடந்­துள்­ளது. வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை அகற்ற முடி­யாது. வடக்கு முத­ல­மைச்­சர் வாய் திறந்­தால் இன­வா­தக் கருத்­துக்­களே வரு­கின்­றன. வடக்­கின் கருத்­துக்­க­ளுக்கு அமைய அரசு தீர்­மா­னம் எடுக்­கப் போவ­தில்லை.

இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜே­வர்த்­தன.
நேற்று ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது:-

வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ ரனிடம் இருந்து வெளி­வரும் கருத்­துக்­களை நாம் அவ­தா­னித்து வரு­கின்­றோம். வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை நீக்க வேண்­டும் என்று அவர் தொடர்ச்­சி­யா­கக் கூறு­கின் றார். அவர் என்ன கூறி­னா­லும் வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது தொடர்­பாக அரசே முடி­வெ­டுக்­கும்.

வடக்­கில் இருந்து ஒரு­போ­தும் இரா­ணு­வம் வெளி­யேற்­றப்­ப­டப் போவ­தில்லை. நாட்­டின் தேசிய பாது­காப்பைக் கருத்­திற் கொண்டு எதிர்­கா­லத்­தில் இரா­ணு­வத்தை வேறு பகு­தி­க­ளுக்கு மாற்­று­வதா என்­பது தொடர்­பா­கத் தீர்­மா­னிக்­கப்­ப­டும். எனி­னும் வடக்­கில் இருந்து இரா­ணு­வம் முற்­றாக அகற்­றப்­ப­டாது.தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த இரா­ணு­வம் தேவை. அதை வடக்­கில் மாத்­தி­ரம் நிரா­க­ரிக்க முடி­யாது. வடக்கு முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் எப்­போ­தும் இன­வா­தத்தை கையில் எடுப்­ப­வர். அவர் இன­வா­தத்தைப் பரப்­பவே கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்.

வடக்­கில் முப்­பது ஆண்­டு­கால போா் இடம்­பெற்­றுள்­ளது. இரா­ணு­வத்தை வெளி­யேற்றி குழப்­பங்களை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்க முடி­யாது. தற்­போது வடக்­கில் அமை­தி­யான சூழல் நில­வு­கின்­றது. பாது­காப்பை வழங்க சிவில் படை­கள் உள்­ளன. பொலி­ஸார் பொது­மக்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­கு­கின்­ற­னர். இரா­ணு­வத்­தி­னர் வடக்­கில் இருப்­ப­தால் யாருக்­கும் எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டப் போவ­தில்லை.அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ருமே இது தொடர்­பான தீர்­மா­னம் எடுப்­பார்­கள். வடக்கு கூறும் கருத்­து­க­ளுக்கு ஏற்ப தேசியப் பாது­காப்பை மாற்ற முடி­யாது.

ரோகிங்ய அக­தி­கள் இலங்­கைக்கு வர­வில்லை. அவர்­கள் வேறு நாடு­க­ளுக்கு பட­கில் செல்ல முயற்­சித்­த­னர். நடுக்­க­ட­லில் உயி­ருக்­காகப் போரா­டிய போது எமது கடற்­படை மூலம் பாது­காக்­கப்­பட்டு இலங்­கை­க்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுத் தங்க வைக்­கப்­பட்­ட­னர். ஐக்­கிய நாடு­கள் சபை­யி­டம் நாம் அவர்­களை ஒப்­ப­டைத்­தோம். விரை­வில் அவர்­கள் வேறு நாடு­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வார்­கள். அவர்­கள் தொடர்­பில் இலங்­கை­யில் உள்ள சிலர் நடந்­து­கொண்ட விதம் வருத்­த­ம­ளிக்­கின்­றது.

பெளத்த தேரர்­கள் சிலர் இணைந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­வது மோச­மான கார­ணி­யா­கும். ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளால் நாட்­டுக்கோ அல்­லது தேசிய பாது­காப்­புகோ எந்த அச்­சு­றுத்­த­லும் இல்லை – என்­றார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்