திருகோணமலையில் அமெரிக்காவின் இராட்சத போர் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இராட்சத போர் கப்பலான USNS Lewis and Clark இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையின் கூட்டுப்பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலானது எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என இலங்கை கடற்படையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலானது 210 மீற்றர் நீளமும், 32 மீற்றர் அகலமும் கொண்டது எனவும், ஒரே நேரத்தில் இரண்டு ஹெலிகொப்டர்களை இந்த கப்பலில் தரையிறக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
திருகோணமலை சீனக்குடா கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த
இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக, இலங்கை கடற்படையினர் போலியான

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*