விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடிய ராணுவம் -கிடைத்தது என்ன தெரியுமா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறுதி யுத்த களங்களாக காணப்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது.

அதற்கமைவாக குறித்த பகுதி அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் நேற்று மாலை 4.20 மணியளவில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவம் விசேட அதிரடிப்படை புதுக்குடியிருப்பு பொலிசார் இணைந்து இந்த அகழ்வு பணியை முன்னெடுத்தனர்.

சுமார் 16 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட போதும் எந்த வித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.

அத்தோடு புதுக்குடியிருப்பு பகுதியில் அகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டு இருந்தும் நேரமின்மை காரணமாக பிறிதொரு தினத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதவானிடம் கோரப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About காண்டீபன்

மறுமொழி இடவும்