கூட்டமைப்பு யாருக்காகவுள்ளது – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக, ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் 25 வருடங்களாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உட்பட அடிப்பரைட வசதிகள் செய்துகொடுக்கப்படாது அவற்றில் முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டியே குறித்த பிரதேச மக்களால் இந்த பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை

மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமக்கான வீட்டுத் திட்டம் நிராகரிக்கப்பட்டமைக்கு நீதி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு வந்த பிரதேச செயலாளர், மக்களை சமரசம் செய்யும் வகையில் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

எனினும் பிரதேச செயலாளரின் விளக்கங்களை மக்கள் ஏற்க மறுத்த நிலையில், இறுதியில் இருதரப்பினருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டது.
கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை

தலைமன்னார் பியர் பகுதியில் றிசாட் சிற்றி என்ற பெயரில் 300 வீடுகள் அமைக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் அந்த வீடுகளில் எவரும் வசிக்காத நிலையில் தாம் வீடுகள் இன்றி அல்லல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம்சாட்டினர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் கவலை வெளியிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்