திண்மக்கழிவு அகற்றல் விவகாரம் 14 நாட்கள் ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவது தொடர்பிலான வழக்கு மேலும் 14 நாட்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். இஸ்ஸடின் குறித்த வழக்கை எதிர்வரும் 14 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, எதிராளிகள் ஆட்சேபனை தெரிவித்ததன் காரணமாக அடுத்த வழக்கின் போது சட்டமா அதிபரினதும், அரசாங்க அதிபரையும் ஆலோசனைக்கு அழைக்குமாறும் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்த நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதமன்றில் அப்பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடை காரணமாக மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்