பாகிஸ்தான் மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 22பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் – ஜால் மஸ்கி பகுதியில் உள்ள ஷியா மசூதியில் கடந்த 05 ஆம் திகதி தொழுகைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒருவரை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்துள்ளார்.

இதனால் அந்நபரும் அருகில் இருந்த 12 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

காயமடைந்த சுமார் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு
பாகிஸ்தனின் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் உள்பட 9 ராணுவ வீரர்கள்
மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராணுவ நடவடிக்கைகள்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*