வடக்கு முதலமைச்சரால் மக்­க­ளுக்கு நீதி கிட்­ட­வில்லை! – தவ­நா­தன்

‘‘வடக்கு மாகா­ணத்­துக்கு முன்­னாள் நீதி­ய­ர­சர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­க ப்­பட்­டார். அவர் தமது பிரச்­சி­னை­ க­ளுக்கு நீதி­வ­ழங்­கு­வார் என தமிழ்­மக்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் அவர்­க­ளுக்குக் கிடைத்­ததோ வெறு­மனே ஏமாற்­றமே’’ – இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் தவ­நா­தன் குற்­றஞ்சாட்­டி­னார்.

வடக்கு மாகா­ண­ ச­பை­யின் 107 ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

அமர்­வில் அவைத்­த­லை­வ­ரால் அர­சி­யல்­கை­தி­கள் பிரச்­சினை தொடர்­பான பிரே­ரணை கொண்­டு­ வ­ரப்­பட்­டது.

இது­தொ­டர்­பாக கருத்­துக்­களை முன்­வைக்­கும் போதே தவ­நாதன் மேற் கண்டவாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ண­சபை மிகப்­பெ­ரிய அள­விலே எதிர்­பார்ப்­பு­டன் ஆரம்­பிக்­கப்­பட்­டது. முன்­னாள் நீதி­ய­ர­சர் ஒரு­வர் முத­ல­மைச்­ச­ரா­ன­தால் மக்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்­பும் எதிர்­பார்ப்­பும் இருந்­தது.

வடக்கு முதல்­வர் சட்­ட­­நுணுக்­கங்­கள் தெரிந்­த­வர். பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைப்­பார் என மக்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் அர­சி­யல்­கை­தி­கள் விட­யத்­திலோ அல்­லது தமிழ்­மக்­க­ளின் அடிப்­படைப் பிரச்­சி­னை­ யிலோ முத­ல­மைச்­சர் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

அர­சி­யல்­கை­தி­கள் பல­த­ட­வை­கள் போராட்­டங்­களை மேற்­கொண்ட­னர். ஏரா­ள­மான உறு­தி­மொ­ழி­க­ளைக் கேட்டு மிக­வும் சலிப்­ப­டைந்­துள்­ள­னர்.

இப்­போது உயி­ரைத் துறக்­கும் வகை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.
ஏனைய போராட்­டங்­க­ளைப் போல இதில் அக்­க­றை­யில்­லா­மல் இருக்­கக்­கூ­டாது.

அவர்­க­ளின் உயிர்­க­ளைக் காப்­பாற்றி காத்­தி­ர­மான தீர்வை வழங்க மாகா­ண­சபை நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் – – என்­றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்