இந்தியாவிலிருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வந்த பெண்ணுக்கு பிணை

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில், கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்லுமாறு இன்று(07) மாலை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

அவரின் கடவுச்சீட்டு இந்தியாவில் காணமல்போயுள்ளது. இதனால், விமானம் மூலம் வருகைதரமுடியாமல் போனதால் சட்டவிரோதமாக படகு மூலம் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

தலைமன்னாரில் வைத்து கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

மன்னார் நீதவான் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தலா 50ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு குறித்த வழக்கு விசாரனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்