தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில், அபிவிருத்தியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது அவர்கள் அவலத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இதன்மூலம் மக்களைத் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுக் குடிபெயர்ந்து செல்லவைப்பதும், ஏதிலிகளாக அலைய வைப்பதுமே திட்டம் – என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
பூநகரிப் பிரதேசத்துக்குச் சென்ற நாடாளுன்ற உறுப்பினர் அங்கு நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் காணப்படும் வலைப்பாடு,கிராஞ்சி, பாலாவி ஆகிய கிராமங்களைப் பார்வையிட்டார்.
அதன்பின்னர் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளற்ற வகையில் அவலப்படுவதை பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் எனஅனைவருக்கும் நேரடியாகவும் கடித மூலமா கவும் தெரியப்படுத்தப்பட்டது.
எனினும், இப்பகுதிகளைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் இருக்கின்றார்கள். இதிலிருந்தே இவர்களது மறைமுகத் திட்டங்கள் வெளிப்படுகின்றன.
இதற்கு இங்குள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் சிலரது பொறுப்பற்ற செயல்களும் துணை புரிவ தாகவே அமைந்துகாணப்படுகின்றன. பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இப்பகுதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இங்குள்ள மக்களும்ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் போன்று வாழவேண்டும் என்பதில் நாம் உறுதியோடு செயற்பட்டு வருகின்றோம் – –என்றார்.