காதல் விவகாரம்: வல்லைவெளியில் இளைஞனுக்குத் தர்ம அடி

காதல் திரு­ம­ணம் செய்­தி­ருந்த இளை­ஞ­னும் பெண்­ணும் தந்­தி­ர­மாக அழைத்­துச் செல்­லப்­பட்டு, வட­ம­ராட்சி வல்­லை­வெ­ளி­யில் வைத்து இளை­ஞன் தாக்­கப்­பட்­டார்.

பெண்­வீட்­டா­ரால் குறித்த பெண் அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இளை­ஞன் காய­ம­டைந்து மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று அவ­ரது உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

அச்­சு­வே­லிப் பகு­தி­யில் வசிக்­கும் 24 வய­து­டைய இளை­ஞன் அச்­சு­வேலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தே­சத்­தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரும் கடந்த முத­லாம் திகதி வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்­று­விட்­ட­னர் என்று கூறப்­ப­டு­கி­றது.

நேற்­று­முன்­தி­னம் வலி.கிழக்­கி­லுள்ள விவா­கப் பதி­வா­ளர் ஒரு­வ­ரி­டம் இரு­வ­ரும் சென்று பதி­வுத் திரு­ம­ணம் செய்­து­த­ரு­மாறு கோர பதி­வா­ளர் அவர்­க­ளுக்­குப் பதி­வுத் திரு­ம­ணம் செய்­து­விட்­டார்.

இரு­வ­ரும் குடத்­த­னை­யில் இருப்­ப­தை அறிந்த பெண்­ணின் உற­வுக்­கா­ரர் திரு­ம­ணத்­துக்­குச் சம்­ம­திப்­ப­தா­கக்­கூறி இரு­வ­ரும் தங்­கி­யி­ருந்த குடத்­த­னைக்­குச் சென்­றுள்­ள­னர்.

குறித்த பெண் காணா­மல் போனமை தொடர்­பான முறைப்­பாடு ஒன்று அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தில் கடந்த வாரம் பெண் வீட்­டுக்­கா­ர­ரால் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்த முறைப்­பாட்டை மீளப் பெற­வேண்­டும் என்று இரு­வ­ருக்­கும் கூறி­யுள்­ள­னர். அவர்­கள் சம்­ம­தித்­த­தும் இரு­வ­ரும் ஓட்­டோ­வி­லும் பெண் வீட்­டுக்­கா­ரர் ஹைஏஸ் வாக­னத்­தி­லு­மாக அச்­சு­வே­லிப் பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­னர்.

வல்­லை­வெ­ளி­யில் திடீ­ரென ஓட்­டோவை தடுத்து நிறுத்­தி­யது ஹைஏஸ். அதி­லி­ருந்து இறங்­கி­ய­வர்­கள் இளை­ஞ­னைத் தாக்­கி­விட்டு பெண்ணைத் தமது வாக­னத்­தில் ஏற்­றிக் கொண்டு சென்றுவிட்டனர் என்று இளை­ஞ­னின் உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

இளை­ஞ­னைத் தாக்­கி­விட்டு பெண்­ணைக் கடத்­திச் சென்­ற­தா­கத் தற்­போது அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தில் முறை­ யி­டப்­பட்­டுள்­ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*