தொடர்புகொண்டார் சுமந்திரன் மறுத்தார் சட்டமா அதிபர்

அனுராதபுரச் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு விடுக்கப்பட்டகோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்ததுடன், சாட்சிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையெனவும், வவுனியாவில் சென்று சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுமந்திரன் சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டு பேசியபோதே சட்டமா அதிபரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இதுவரைகாலமும் வவுனியாவில் வழக்கு விசாரணை நடைபெற்றாலும், வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக உள்ளனர்.

வவுனியாவில் சென்று சாட்சியமளிக்கமாட்டோம் என்கின்றனர். அதற்கு பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தின் அடிப்படையிலேயே வழக்கினை அனுராதபுரத்துக்கு மாற்றியுள்ளனர்.

அந்த வழக்கு விசாரணை அனுராதபுரத்திலேயே நடைபெறும். வவுனியாவுக்கு மாற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கைதிகளின் வழக்கு விசாரணையை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்சிவசக்தி ஆனந்தன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியபோது, குறித்த மூவரினதும்வழக்கு விசாரணைகள்தொடர்ந்தும் வவுனியாநீதிமன்றத்திலேயே நடைபெறும் என உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்