மைத்திரிக்கு கறுப்பு கொடி: ஆளுநர் முற்றுகையினுள்!

எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையினில் கறுப்புக்கொடி போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.இலங்கை கல்வி அமைச்சினால் நடத்தப்படவுள்ள தமிழ் மொழி விழாவினில் பங்கெடுக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சகிதம் அவர் வருகை தரவுள்ளாhர்.

இதனிடையே அதற்கு முதல்நாளான 13ம் திகதி வெள்ளிக்கிழமை, வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்வதுடன் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் மக்களையும் தாம் உரிமையோடு அழைப்பதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும், எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அணி திரளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்