இனவாத சிந்தனையை வளர்த்ததாலேயே தமிழர்கள் அழிவைச் சந்தித்தார்கள் என்கிறார் துரைராசசிங்கம்!

கடந்த காலத்தில் தமிழர்கள் இனவாதச் சிந்தனையை வளர்த்துக்கொண்டதாலேயே பாரிய அழிவைச் சந்தித்துள்ளார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விஸ்வகர்ம சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

இன்றைய சூழலில் நாமனைவரும் இனவாத எண்ணத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம். என உறுதியெடுக்கின்றோம்.

ஆனால் அவ்வாறு நடக்கிறோமா எனச் சிந்தியுங்கள். எப்போதெல்லாம் இந்த நாட்டில் இனவாதக் கருத்துக்கள் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் நாம் பாரிய அழிவுகளைச் சந்தித்தோம்.

எனவே நாம்தேசிய கீதத்தில் கூறியுள்ளபடி சிந்தித்து தமிழர், சிங்களவர், முஸ்லிம் என வேறுபாடுகாட்டாது வாழ்வோம்எனத் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்