விடுதலைப் புலிகள் தயாரித்த வெடிகுண்டுகள்! அதிர்ந்துபோன அமெரிக்க அதிகாரிகள்!

முகமாலைப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சுயதயாரிப்பு குண்டுகள் அமெரிக்க தூதுக்குழுவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடத்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள முகமாலை பகுதியில் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் குறித்த பகுதியில் வெடி அகற்றும் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நிதி உதவியின்மூலம் டாஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளையே குறித்த குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடி, கண்ணி வெடிகள், கைகுண்டுகள், செல்கள் கிளைமோர் குண்டுகள் மற்றும் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடி பொருட்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகக் குழுவினருக்கு டாஸ் நிறுவன அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது விடுதலைப் புலிகளால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டு அமெரிக்க தூதுக்குழுவினர் வியப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக உள்ளூர் இரும்பு மற்றும் தகரம் போன்ற மூலங்களைக் கொண்டு வித்தியாசமான முறையில் அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தவல்ல வெடிபொருட்களையே குறித்த குழுவினர் ஆச்சரியத்தோடு பார்த்துள்ளனர்.

இதேவேளை போர்க்காலத்தில் முகமாலை முன்னரங்கு மிகப்பெரிய யுத்த சூனியப் பிரதேசமாக விளங்கியதோடு விடுதலைப் புலிகள் தம்மால் சுயமாகத் தயாரித்த வெடிகுண்டுகளைக் கொண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு பாரிய இழப்புக்களினை ஏற்படுத்தியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டு அவரது கனவை கலைப்பதற்கென்றே தற்போது சில சதிகாரர்களால் முன்னெடுக்கப்படும்
அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யைக் குழப்­பு­வது எமது நோக்­க­மல்ல. அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும்
ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய்யென தமிழ்த்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*