இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு இருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ, சியம்பலாவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வனப்பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 18 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்