ஆர்.கே.நகர் தேர்தல்: மதுசூதனன்-தினகரன் மீண்டும் போட்டி

ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் களம் இறங்க உள்ளார். டி.டி.வி. தினகரனும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்ததால் தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர்.ஆனால் பணப்பட்டு வாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந்திகதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு மீண்டும் போட்டியிடப்போவது யார்? யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

இப்போதைய சூழ்நிலையில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனனே மீண்டும் களம் இறங்க உள்ளார். டி.டி.வி. தினகரனும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெறும் வேட்பாளரே அ.தி.மு.க. வேட்பாளராக கருதப்படுவார் என்பதால் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் இந்த மாதத்துக்குள் இறுதி முடிவு எட்டப்பட்டு விடும் என்றே தெரிகிறது.

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தலின் போது இருந்த நிலைமை இப்போது இல்லை. அப்போதும் அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்து இருந்தது. சசிகலா அணி சார்பில் களம் இறங்கிய தினகரனின் பின்னால் ஒரு அரசாங்கமே அணி வகுத்தது.

தினகரனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களே பிரசாரத்தில் குதித்தனர். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன.

சசிகலாவால் ஆட்சி கட்டிலில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து விட்டனர். பிரிந்திருந்த அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேர்ந்து விட்டதாக கூறி பொதுக்குழுவை கூட்டி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர்.

இதனை தேர்தல் ஆணையத்திலும் முறையாக தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட அ.தி.மு.க. நாங்கள்தான் என்றும் எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் தினகரன் அணியினரும், தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே உண்மையான அ.தி.மு.க.வாகவும் அறிவிக்கப்படுவார்கள்.

இப்படி ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் 2 அணிகளாக மோதும் சூழலே நிலவுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வும் மீண்டும் போட்டியிட உள்ளது. தி.மு.க. வேட்பாளராக மீண்டும் மருதுகணேஷ் போட்டியிடுவாரா? அல்லது வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து விட்டார்.

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவர் களம் இறங்குவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதுபற்றி தீபா நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*