சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப் பெல்டர், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற கேணல் ஜோசப் பெல்டர், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இருதரப்பு. பலதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும், தற்போதைய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவையும், கேணல் பெல்டர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, கடல்சார் பாதுகாப்பு, இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தல், தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட

About சாதுரியன்

மறுமொழி இடவும்