உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்தது – வலுக்கட்டாயமாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

கடந்த இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை இன்று மோசமடைந்ததையடுத்து வலுக்கட்டாயமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈழதேசம் இணையம் அறிகிறது.

தமது வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே நடத்துமாறு கோரி மூன்று அரசியல் கைதிகள் 20 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றநிலையில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் தான் என்று அரசியல் செய்துவரும் கூட்டமைப்பினர் மெளனம் காத்துவருகின்றதோடு சர்வதேசத்திடம் சிறீலங்கா அரசை பிணையெடுக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுவருவதாக சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

About சாதுரியன்

மறுமொழி இடவும்