யாழ். குடாநாட்டில் டெங்கின் தீவி­ரத்­தால் மாணவி, தாய் அடுத்­த­டுத்து பரிதாபச் சாவு

டெங்­குக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்பட்ட பாட­சாலை மாண­வி­யும் தாய் ஒரு­வ­ரும் சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்தனர் என்று யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைத் தகவல்கள் தெரி­வித்­தன.

கலட்டி அம்­மன் வீதி, யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த கணே­ச­மூர்த்தி சாரா (வயது -9) என்ற மாணவி யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நேற்று உயி­ரி­ழந்­தார். இவர் யாழ்ப்­பா­ணம் பொஸ்கோ பாட­சா­லை­யில் கல்வி கற்­கி­றார்.

இணு­வில் கிழக்­கைச் சேர்ந்த சிறி­ராஜா மல்­லி­கா­தேவி (வயது – 49) என்­ப­வ­ரும் யாழ்ப்­பா­ணம் போதனாமருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார். இவர் குடும்­பப் பெண்.

பாட­சா­லை­யில் கடந்த 11 ஆம் திகதி மாணவி சோர்­வ­டைந்­த ­நி­லை­யில் இருந்­தார். பெற்­றோ­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்டது. அவர்கள் வந்து மாணவியைத் தனி­யார் சிகிச்சை நிலை­யத்­தில் காண்­பித்து மருந்து மாத்­தி­ரை­கள் பெற்று வீட்­டில் வைத்­துக் கவ­னித்து வந்­துள்­ள­னர்.

காய்ச்­சல் குறை­ய­வில்லை. 4 ஆம் நாள் (நேற்­று­முன்­தி­னம்) தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அங்கிருந்து சிறு­மி­ மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்றப்பட்டார். எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்று அதி­காலை மாணவி உயி­ரி­ழந்­தார்.

டெங்­கி­னால் உயி­ரி­ழந்த குடு­பப் பெண்­ணும் காய்ச்­சல் கார­ண­மாகத் தனி­யார் சிகிச்சை நிலை­யத்­தில் மருந்து மாத்­திரையைப் பெற்று வீட்­டில் இருந்­துள்­ளார். காய்ச்­சல் அதி­க­ரித்­த­ நி­லை­யில் 4 ஆவது நாளான நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டும்­போது உயி­ரி­ழந்­து­விட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. மருத்துவ சோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் இரு­வ­ரது சட­லங்­க­ளும் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்