வவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவ விவகாரம்: 20 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 20 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி வவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறி வாள் வெட்டில் முடிந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்து அனைவரையும் திங்கள் கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்