தினகரனுடன் இணையும் பண்ருட்டி ராமச்சந்திரன்?

எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிக அவைத் தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். அதுவும் அதிமுக அணிகளாக உடைந்து சிதறிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கனத்த மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிமுகவின் 46-வது ஆண்டு தொடக்க நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிமுக(அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரனை பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்