சிவகரனுக்கு மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினூடாக விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக விசாரணைக்கு வர முடியாது என சிவகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையிலே, எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,

எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினுடாக இன்று(17) மதியம் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்