காணாமல் போன யுவதிகள் விடையத்தில் திருப்பம்!

கொழும்பு, கொலன்­னாவை – சால­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த மூன்று யுவதிகள் காணாமல் போயுள்­ள சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கி­ழமை பிற்­ப­கலில் இருந்து கொலன்­னாவை–சால­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த 19 வய­தான முலிதி வத்­சலா பெரேரா என்ற திரு­ம­ண­மான பெண்ணும், 15 வய­தான யசந்தி மது­ஷானி பெரேரா மற்றும் 14 வய­தான சவித்ரி ஆகி­ய இரு பாடசாலை மாணவிகளும் காணாமல் போயுள்­ள­தாக உற­வினர்கள் பொலிஸில் முறைப்­பாடு செய்­திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை யசந்தி மது­ஷானி பெரேரா என்ற மாணவி தனது சகோ­த­ர­னிடம் தொலை­பேசி ஊடாக அழைத்து தான் நல­மாக இருப்­ப­தா­கவும் தன்னை தேட­வேண்டாம் என கூறி­ய­தாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் மீண்டும் அந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைக்க வேண்டாம் என கூறி­யுள்­ள­தா­கவும் மாண­வியின் சகோ­தரர் தெரி­வித்­துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் அயல் வீடு­களில் வசிக்கும் குறித்த மூவரும் ஆடை கொள்­வ­னவு செய்வதற்காக கடைக்­குப்­போ­வ­தாக கூறி வெளியில் சென்றுள்ளனர்.

இந்த நிலை­யில் சென்ற மூவரும் இன்னும் வீடு திரும்பவில்லை என காணாமல் போனோரின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

காணாமல் போன மூவரில் 19 வய­தான முலிதி வத்­சலா பெரேரா என்ற யுவ­திக்கு ஒன்­றரை வயது குழந்­தை­யொன்றும் இருப்­ப­தாக அவரின் பெற்றோர் தெரி­வித்­துள்­ளனர்.

அவர்­களின் தொலை­பே­சிக்கு தொடர்­பு­கொள்ள முயற்­சித்த போதிலும் எவ­ரது தொலை­பேசி அழைப்­பு­களும் தொடர்பில் இல்லை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் பெற்­றோரால் வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டதற்கு அமைய பொலிஸார் மாண­விகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இவ்வாறானதொரு தொலைபேசி அழைப்பு வந்தமையினால் குறித்த மாணவிகளின் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வரு­வ­தா­க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்