சிறுபான்மையினரை பாதுகாப்பதாக இரண்டாவது சபை அமையவேண்டும்: கஜேந்திரகுமார்

சிங்கள தேசம் விரும்பும் ஒன்றை வடக்கு, கிழக்கு மண்ணில் ஜனநாயகம் என்ற பெயரில் பலவந்தமாக திணிக்காத வகையில் பாதுகாக்கும் சபையாக இரண்டாம் சபை அமையவேண்டும் என, தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபின்போது, சமகால அரசியல் நிலைமை மற்றும், புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவா் தொடா்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் இரண்டாவது சபை தொடா்பிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாகாணத்தையும் பிரிதிநிதிதுவப்பபடுத்தும் ஐவா் அங்கம் வகிப்பாா்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாக்க போதுமானதல்ல. இரண்டாவது சபையில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு ஏதாவதொரு மாகாணத்தின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்தவொரு சட்டமும் குறித்த மாகாணத்தில் செல்லுபடியற்றதாக இருக்கும் வகையில் இரண்டாவது சபை அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளாா்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்