வரலாறு பதில் சொல்லும் சிவாஜி!

அரசியல் கைதிகள் விவகாரத்தினில் நான் குற்றமிழைத்திருந்ததாக சொல்லப்படுவது பொய்யானது.இலங்கை அரசுடன் துணைபோனதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது.நிச்சயம் வரலாறு அதற்கு பதிலளிக்குமென தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் காரசாரமாகியிருந்து.அரசியல் கைதிகள் விவகாரத்தினில் தான் எப்போதுமே துரோகமழைத்திருக்கவில்லையென தெரிவித்த அவர் அன்று மைத்திரி வருகை தரவுள்ளதாகவோ,ஆர்ப்பாட்டகாரர்களை முன்கூட்டியே சந்திக்கவுள்ளதாகவோ தனக்கு தெரிந்திருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

முதலில் ஒரு வாகனத்தொடரணி வந்த போது மைத்திரியே வருவதாக உணர்ந்தேன்.ஆனால் இரண்டாவது தொடரணியாகவே அவர் வந்தார்.சுரேஸ்,தம்பிராசா போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையினில் என்னை காவல்துறை அதிகாரியே மைத்திரியிடம் அழைத்து சென்றிருந்ததாக தெரிவித்தார்.
அவ்வாறான சூழலில் திட்டமிட்டு அரசியல்கைதிகளது குடும்பங்களை ஜனாதிபதியை சந்திக்க வைக்கமுடியாமைக்கும் அதுவே காரணமென தெரிவித்த அவர் மைத்திரி அங்கு வருகை தரவள்ளதை அறிந்திருந்த கஜேந்திரகுமார்,சுரேஸ் போன்றவர்கள் அதனை ஏற்பாடு செய்திருக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
தெற்கினில் தீவிர தமிழ் இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தாங்கள் மைத்திரியுடன் போராட்டத்தின் போது பேசியதை தெற்கு ஊடகங்கள் அவருக்க ஆதரவாக பிரச்சாரப்படுத்துகின்றனவே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் மைத்திரி வென்றிருப்பதாக மட்டும் தெரிவித்தார்.

இதனிடையே அரசியல் கைதிகளது குடும்ப அங்கத்தவர்களை அழைத்துக்கொண்டு நாளை கொழும்பு பயணிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் தான் சந்திக்கமுடியாவிட்டாலும் அக்குடும்பங்கள் ஜனாதிபதியை சந்திக்கவைக்க முற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவர் குற்றி அரிசியானாலும் சரி,தயவு செய்து அரசியல் கைதிகளை முன்னிறுத்தி அரசியல் வேண்டாம்.கொள்கை சார்ந்து கஜேந்திரகுமார் போன்றவர்களுடன் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்