சுவிஸ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பம் சுவிஸ் செல்கிறது!

கடந்தவாரம் சுவிற்சலாந்தின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் சக அகதிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தை சேர்ந்த சுப்ரமணியம் கரன் எனும் ஈழ தமிழ் அகதி கோரிக்கையாளர் மரணமடைந்திருந்தார்.

இந்த நிலையில் கொல்லபட்ட குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயம் செய்த சுவிஸ் தூதரக அதிகாரிகள் குறித்த குடும்பத்தின் கஷ்ட நிலைமைகளை நேரடியாக் பார்வையிட்டதோடு அவர்களின் வேண்டுகோளையும் கேட்டறிந்து கொண்டனர். இதன் பின்னர் நேற்றுமுன்தினம் சுவிஸ் தூதரகத்தால் குறித்த குடும்பத்தினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு மிகவிரைவில் சுவிஸ் பயணம் செல்ல ஆயத்தமாகுமாறு பணிக்கபட்டுள்ளனர்.

சுட்டு கொல்லபட்டவரின் மனைவி இரு மகள்கள் மற்றும் சகோதரன் ஒருவரும் சுவிஸ் அரசின் செலவில் அழைக்கப்பட்டு இறுதி கிரியை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி செய்யபட்டு கொடுக்கபட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்