இந்திய அரசையே ஆட்டிப்படைத்த வீரப்பனின் 13 ஆண்டு நினைவு தினம் இன்றாகும்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்திய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 18. 1952-ம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி பிறந்த வீரப்பன் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18- ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று விநோதம்தான். 1972-ம் ஆண்டு சந்தன மரக் கடத்தலுக்காக முதன் முதலில் வீரப்பன் கைது செய்யப்படுகிறார். வீரப்பனை நாடறிய செய்தது தமிழக போலீஸ் அதிகாரி சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவம். அதேபோல் 1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என அடுத்தடுத்த வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு வீரப்பன் அடைக்கலமும் கொடுத்தார். அப்போதுதான் கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார். தமிழ்த் தேசிய கோரிக்கைகளுக்காக ராஜ்குமாரை கடத்தியதாகவும் அறிவித்தார் வீரப்பன். 108 நாட்கள் ராஜ்குமாரை தம் வசம் பிணைக் கைதியாக வைத்திருந்தார் வீரப்பன். முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால், பின்னர் பழ. நெடுமாறன் தலைமையிலான குழு, கொளத்தூர் மணியின் முயற்சிகள் என ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமது சில கோரிக்கைகள் நிறைவேறிய நிலையில் ராஜ்குமாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் வீரப்பன். பின்னர் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதியன்று வீரப்பனும் அவரது கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் அறிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்